சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

நான்காம் ஆயிரம்   நம்மாழ்வார்  
திருவாய் மொழி  

Songs from 2899.0 to 4000.0   ( )
Pages:    Previous   1  2    3  4  5  6  7  8  9  10  Next  Next 10
எண் பெருக்கு அந் நலத்து
ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன்
திண் கழல் சேரே     



[2919.0]
சேர்த்தடத் தென் குரு
கூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து
ஓர்த்த இப் பத்தே     



[2920.0]
Back to Top
பத்து உடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
ஏங்கிய எளியவே   



[2921.0]
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே   



[2922.0]
அமைவு உடை அறநெறி முழுவதும்
உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை
அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும்
யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை
அறிபவர் யாரே?       



[2923.0]
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
      அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
      எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
      உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
      இலது இல்லை பிணக்கே   



[2924.0]
பிணக்கு அற அறு வகைச் சமயமும்
      நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம் இல்
      ஆதி அம் பகவன்
வணக்கு உடைத் தவநெறி வழிநின்று
      புறநெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை
      உணர்வுகொண்டு உணர்ந்தே     



[2925.0]
Back to Top
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
      வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
      உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
      அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
      மனப்பட்டது ஒன்றே   



[2926.0]
ஒன்று எனப் பல என அறிவு அரும்
      வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
      அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
      இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
      நம்முடை நாளே   



[2927.0]
நாளும் நின்று அடு நம பழமை அம்
      கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
      மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
      நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
      மாள்வது வலமே   



[2928.0]
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
      இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
      உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
      அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
      இவை அவன் துயக்கே   



[2929.0]
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
      அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
      பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
      கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
      வணங்குவன் அமர்ந்தே   



[2930.0]
Back to Top
அமரர்கள் தொழுது எழ அலை கடல்
      கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
      சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
      இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
      பிறவி அம் சிறையே   



[2931.0]
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ?   



[2932.0]
என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே     



[2933.0]
விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே     



[2934.0]
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ?   



[2935.0]
Back to Top
நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே   



[2936.0]
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே?     



[2937.0]
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே?   



[2938.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song